
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஆண்டவனின் விருப்பம் இல்லாமல், மரத்தின் இலை கூட அசைய முடியாது.
* என் பணம், என் படிப்பு என்று சிறிதும் எண்ணாதே. நான் மக்களின் சேவகன், நான் பக்தன் என்று எண்ணிக் கொள்.
* கடவுளை அடைய வேண்டும் என்ற ஏக்கம் அதிகரித்தால், மனம் பக்குவமாகி விடும்.
* கடவுளைப் பற்றிய ஒவ்வொருவரின் அனுபவமும் ஒவ்வொரு வகையில் புதுமாதிரியாக இருக்கும்.
* உயர்வுக்கும், தாழ்வுக்கும் அவரவர் மனமே காரணம்.
* தன்னை குருவாக கருதிக் கொண்டு ஒவ்வொருவரும் மக்களுக்கு அறிவுரை வழங்குவது நல்லதல்ல.
-ராமகிருஷ்ணர்